13 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வரலாறு பாட ஆசிரியர் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபாடசாலையில் கற்பிக்கும் சந்தேக நபரான வரலாறு பாட ஆசிரியர் கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி மாணவியை ஏமாற்றி மல்வத்தாவெல பிரதேசத்திற்குத் தனது காரில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மாணவிக்கு அச்சுறுத்தல்
பின்னர், இது தொடர்பில் எவரிடமும் கூறக் கூடாது என சந்தேக நபரான வரலாறு பாட ஆசிரியர் மாணவியை அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த மாணவி நீண்ட நாட்களாகப் பாடசாலைக்கு வருகை தராததால் அதே பாடசாலையில் கடமையாற்றும் மற்றுமொரு ஆசிரியை இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போதே சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து ஆசிரியை இது தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான வரலாறு பாட ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். சந்தேக நபரை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.