ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் - தேர்தல் ஆணையகம்




ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் தனக்கு பொருத்தமான எம்.பி.க்கள் இல்லை என நினைத்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டும் என எதிர்பார்க்க முடியும்.

அப்படியானால், ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும்.

இதன்படி, 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை