எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்



மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதற்கமைய ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட விலை ஒகஸ்ட் மாதம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது.

எரிபொருள் விலை திருத்தம் 
அதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 379 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 202 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.



இந்த நிலையில் இன்றைய தினம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை