தாய்ப்பால் புரைக்கேறியதால் மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!



யாழ்ப்பாணம் - முருசாவில் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக மூன்று மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்தது.


குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது.


இதனையடுத்து குழந்தை உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குழந்தையின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை