ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கமுன்புர, பிள்ளையார் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (16-08-2024) அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சந்தேகநபர்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.