தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்!



தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் இன்று(24-08-2024) வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.

தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது தொடர்பாகவும், வருகின்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், கட்சியின் ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
புதியது பழையவை