நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் பெற்றே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.