கட்டுப்பணம் செலுத்தினார் தமிழ் பொது வேட்பாளர்



ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது.

சி.வி.விக்கினேஸ்வரன், தலைமையிலான, தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரன், பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக கடந்த 08 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.


சுயேட்சை வேட்பாளர்

குறித்த அறிவிப்பை தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா அன்றையதினம் வெளியிட்டார்.



அதனை தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரன் சுயேட்சை வேட்பாளராகவே காணப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.


மேலும், ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரன் சுயேட்சை வேட்பாளராகவே காணப்படுவார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவிப்பை வெளியிட்டார்.
புதியது பழையவை