திருக்கோணேஸ்வரர் ஆலய தாலி விவகாரம் - ஆளுனர் தலைமையிலான கூட்டத்தில் சர்ச்சை



திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள அம்மனுடைய தாலி களவாடப்பட்ட விடயம் தொடர்பில் போலியான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், ஆலய பொதுச்சபையின் ஆயுட்கால உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு திருகோணமலை - உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவகாந்தினால் ஆளுநர் மீது குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டது.


ஆளுநராகிய நீங்கள் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட விடயத்தை முன்னெடுக்கிறீர்கள். களவு தொடர்பில் கண்டுபிடிப்பதற்கு நீதித்துறையும், பொலிஸாரும் காணப்படுகின்றனர்.


இதில் உங்கள் மீதும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. திருகோணமலை கோவிலில் போஷகர் பதவியை கேட்டிர்கள், அது மறுக்கப்பட்டது.

இதன்காரணமாகவே உங்களால் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபடுவதாக கூறப்படுகிறது.

இதில் நகை இல்லை என கூறுவது முற்றிலும் பொய்யானது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் காணப்படுகிறது." என்றார்
புதியது பழையவை