தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு தினம்



யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் 74வது பிறந்தநாள் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது.

உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இன்று (26-08-2024) காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


மேலும் இந்த நினைவு தின நின நிகழ்வில் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை