காதுகளால் வாகனம் இழுத்து சாதனை!



யாழ். தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1,500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.

ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சென்றுள்ளார். நேற்றையதினம் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.



இதேவேளை, செல்லையா திருச்செல்வம், இதற்கு முன்னர் பல தடவைகள் தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை