முல்லைத்தீவில் வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணை வீதியில் தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (14-08-2024) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு வண்ணாங்குளம் கிராமத்தில் இருந்து உண்ணாப்பிலவு வைத்தியசாலைக்கு மாதாந்த சிகிச்சைக்கு சென்ற வயோதிப பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த 25, 24 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கசங்கிலியினை அறுத்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை