சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!



இவ்வருடம் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 12,50,000ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை சுமார் 12,71,432 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

வெளிநாட்டுப் பார்வையாளர்களில் 2,37,649 பேர் இந்திய சுற்றுலாப் பயணிகளென்று தெரிவித்தது.

இது தவிர ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இம்மாதம் முதல் 11 நாட்களில் மொத்தமாக 73,373 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை