இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து எமது கட்சியின் ஏற்பாட்டில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டமானது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் பங்குபற்றலுடன் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிரதான பங்குபற்றலுடன் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் இடம் பெற்றன.
எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு ஆளுமை மிக்க நேர்த்தியான அரசியல் தமையின் அவசியத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தி இருந்ததுடன், கொடிய போரின் நேரடி பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த எமது மக்களை பெரிதும் பாதித்தது. எனவே நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியிலும் வலுவான கட்டமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்திய வரும், தற்போதைய காலகட்டத்தில் நாட்டை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்திச் சொல்லக்கூடிய வருமான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் தீர்மானத்தை கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில் ஒரு தூர நோக்கு சிந்தனையுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிக்கும் தீர்மானத்தை எமது கட்சி எட்டியிருந்தது.
அந்த வகையில் எமது அழைப்பை ஏற்று கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி அன்று எமது தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எமது கட்சியின் தலைவர் பணிக்கு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் மிக நீண்ட காலமாக கிடப்பில் உள்ள மாகாண சபை தேர்தலை நடத்துதல், மாகாண சபை அதிகார பகிர்வு உள்ளிட்ட முக்கிய அரசியல் தீர்வுகள் தொடர்பிலும் சாதகமான பதிலை வழங்கியிருந்தார்.
எடுத்த காரியத்தை இதய சுத்தியுடனும் நேர்த்தியாகவும் நிறைவேற்றும் பண்பும் வலுவான அரசியல் கட்டமைப்பும் கொண்டுள்ள நாம் எமது தீர்மானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விசிரமசிங்க அவர்களின் வெற்றிக்கான தேர்தல் பிரச்சார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக இன்றைய நாளில் பிரம்மாண்டமான மக்கள் கூட்டத்துடன் நமது கட்சியின் பலத்தை பறைசாற்றும் கூட்டமாக ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம்.
பிரமாண்டமான குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கு பற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறப்பாக செயலாற்றிய எமது கட்சியின், தலைவர் பணிக்குழு, பிரதேச மற்றும் கிராமிய மட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன, வர்த்தக வாணிபம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் உட்பட ஜனாதிபதியின் பிரதானிகள், எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.