தனி நபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தவொரு பணமும் அல்லது காசோலைகளும் தங்கள் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் போல வரும் நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.