திருகோணமலையின் கிண்ணியா, மூதூர், தம்பலகாமம் பகுதிகளில் சமஷ்டியை வலியுறுத்திய துண்டு பிரசுர பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த துண்டு பிரசுரங்களானது நேற்று (06-08-2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின், வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட 100 நாள் செயல்முனைவின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு கிழக்கு பிரதேசம் எங்கும் சமஷ்டியை வலியுறுத்திய துண்டுப்பிரசுர பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.