மட்டக்களப்பு நகரின் வீதிகளில் நிறைந்திருக்கும் குப்பைகளையும், அடைக்கப்பட்டிருக்கும் வடிகால்களையும் பார்க்கின்ற போது, மட்டக்களப்பு மாநகரசபை இயங்குகின்றதா என்கின்ற கேள்வி எழுகின்றது.
வீதிகளின் பெயர்ப்பலகைகள் எழுதப்பட்டிருக்கின்ற பெயர்கள் அழிந்து காணப்படுகின்றன.
வடிகால்கள் நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படவில்லை. பல வடிகால்கள் மண் நிறைந்து முற்றாகவே அடைக்கப்பட்டுக் காணப்படுகின்றன.
இன்றைய தினம் பாடசாலைகள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் மாதில்களுக்கு வெளியே குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன.
குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணம் செய்கின்ற அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், கால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சம் இறங்கி, உங்களுக்கு வாக்களித்த மக்கள் வாழுகின்ற தெருக்களையும் ஒரு தடவை பாருங்கள்.
இல்லாவிட்டால், கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்தாவது நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உதவுங்கள்