சிறுமி பெற்றெடுத்த குழந்தையை ஒப்படைக்குமாறு கோரி - நீதிமன்றில் மனு



தகாத உறவுக்கு உட்படுத்தப்பட்ட, 14 வயது சிறுமி ஒருவர் பெற்றெடுத்த கைக்குழந்தையின், தாத்தா, மற்றும் பாட்டி ஆகியோர், அனுராதபுரம்,கெப்பித்திகொல்லேவ, நன்னடத்தை அதிகாரிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமது மகளை தகாத உறவுக்கு உட்படுத்தியவரிடமே, தமது மகளின் குழந்தையை, பிரதிவாதியான அதிகாரி, ஒப்படைத்த முடிவை எதிர்த்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமது மகளை தகாத உறவுக்கு உட்படுத்தியவர், கஞ்சாவுக்கு அடிமையானவர் என்றும், அவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.


இந்த மனு, கெப்பித்திகொல்லேவ மாவட்ட நீதிபதி டிலீசியா திஸாநாயக்க.முன்னிலையில் நேற்று முன்தினம்(02-08-2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த சிறுமி பிரசவித்த ஆண் சிசு, அவரிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் இரண்டாம் பிரதிவாதியான, சிறுமியுடன் தகாத உறவு கொண்டவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அத்துடன், குழந்தைக்கான தாயின் பராமரிப்பு, பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் தாய்ப்பால் என்பன மறுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த நிலையில், குழந்தையை மனுதாரர்களிடம் ஒப்படைக்க இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
புதியது பழையவை