கடந்த 2023(2024) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகள் குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் விபரங்களை திருத்த வேண்டி ஏற்பட்டால் இம்மாதம் ஒன்பதாம் திகதி வரை இணையத்தளம் மூலம் திருத்த வசதியளிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.