நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்



நாட்டில் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ் விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடவுச்சீட்டு தொடர்பில் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை