தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை வெளியீடு!



2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
புதியது பழையவை