தமிழர் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்ளை தாக்கியது யார்?



வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 12:15 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவர், எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரோடு தாக்கப்பட்டனர்.


பொலிஸார் வர தப்பியோட்டம்
அதேவேளை சம்பவம் இடம்பெற்றபோது அங்கு போக்குவரத்து பொலிஸார்  இருவரும்  அங்கு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் திடீரென அவர்களில் ஒருவர் அங்கு வேறு கடமையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் நடத்தினார்.


இதன்போது போக்குவரத்து பொலீசார் இருவர் சம்பவ இடத்தில் இருந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தடுப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றைய ஊழியர் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு முச்சக்கர வண்டியில் பொலீசார் வருகை தந்த போது தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை