8 வயது சிறுமி துஸ்பிரயோகம் - 60 வயது முதியவர் கைது!



வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் 8 வயது சிறுமி ஒருவர் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த (26-09-2024) அன்று வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அம்பாறை சம்மாந்துறை பொலிஸார்
குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு நேற்று(29-09-2024) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை