எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் நேற்று (29-09-2024) இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் பொதுச்சபை
மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஈடுபடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இக்கூட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் பொதுச் சபையை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.