கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் பெண் அதிரடி கைது!



வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பலரை ஏமாற்றிய இளம் பெண் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர், யுவதிகள் என 10 பேரிடமிருந்து 60 இலட்சம் ரூபா பெற்றுள்ளார்.


இந்நிலையில், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் குறித்த பெண் முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் சிலாபம் களுகம பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
புதியது பழையவை