மட்டக்களப்பில் தக்காளிச்சாறு நிறுவன உற்பத்தியாளருக்கு அபராதமும் சிறையும்!



மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் தக்காளிபழ சாறு கலவையில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறி மனித சுகாதாரத்திற்கு  தீங்கு விளைவிக்கும் பென்சோயிக்கமிலம்,
செயற்கை நிறமூட்டி கொண்டு தயாரிக்கபட்ட கலவையை பாவித்த சிற்றுண்டிச் சாலை உரிமையாளர், விநியோகித்தர்,தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக இன்று (13-09-2024)ஆம் திகதி வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதிமன்றினால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் S.ரவிகரன் அவர்களால் இன்று(13-09-2024)ஆம் திகதி  தொடுக்கபட்ட வழக்கில் தக்காளி சாறு கலவை நிறுவன உரிமையாளருக்கு ரூபாய் 36000 தண்டபணமும் அத்துடன் 6 மாத    சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கபட்டதுமாக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் விதிக்கப்பட்டது.
புதியது பழையவை