கல்முனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பிரதீபா கடமையேற்பு!




கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் திருமதி பிரதீபா பார்த்தீபன் தனது கடமையை இன்று (09-09-2024) பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த சிரேஷ்ட தரம் 1 இல் உள்ள ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நேர்முகத்தேர்வு அன்மையில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்டது. 

அத்தேர்வில் வைத்தியர் திருமதி பிரதீபா பார்த்தீபன்
சித்தியடைந்து கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமனம் பெற்று இன்றைய தினம் அவர் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை