ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற ரயில் நிலைய அதிபர் மற்றும் ரயில்வே உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களுடன், 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 250 கிராம் 320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் கம்பஹா டோபோகொட மற்றும் நீர்கொழும்பு தெமன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.