எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்



மாதாந்திர சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, இந்த மாதம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தினை லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

எரிவாயு சிலிண்டரின் விலை 
இறுதியாக ஜூலை 2ம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.


இதையடுத்து, ஒகஸ்ட் மாதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகும். 5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,482 ஆகவும், 2.3 கிலோ எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டர் ரூ.694 ஆகவும் உள்ளது.
புதியது பழையவை