மஸ்கெலியா இமவுசாகல லக்கம் பிரிவிலுள்ள புதிய பாலத்துக்கு அருகில் சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
கம்பியில் சிறுத்தைப்புலி சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினரால் அது தொடர்பில் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுத்தையை மீட்க முயற்சித்திருந்தனர்.
இருப்பினும் சிறுத்தைப் புலி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில்இ உயிரிழந்த சிறுத்தையை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தோட்டத்தில் கம்பி வலையை போட்ட சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார்இ நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.