மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் தெரிய வருவதாவது, மீராவோடைப் பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் போதைப்பாவனையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களைப் சுற்றி வளைத்துப் பிடிக்க முற்பட்ட இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் கத்தியால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான இரு இளைஞர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கையில் வெட்டுக்காயத்திற்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மட்டு.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவ்விருவரையும் தாக்கிய சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸாரால் கைதானவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஓட்டமாவடி பிரதேசத்தில் திருட முற்பட்டார் என்ற சந்தேகத்தில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக மட்டு.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.