கொழும்பு - மாளிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபரொருவர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் மாளிகாவத்தை பிரதான வீதியின் அருகே நேற்றிரவு(22-09-2024) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என்று அறியப்படும் ஷிரான் பாஸித்தின் நண்பரான ரிபா காதர் என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்திருந்த ஓய்வு விடுதியான சோல் பீச் ரிசோர்ட் எனும் சுற்றுலா விடுதி, முறைகேடான வகையில் உழைத்த பணத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி பொலிஸாரினால் இடித்துத் தள்ளப்பட்டது.
குறித்த விடுதியின் உரிமையாளரான ரிபா காதர் என்பவரே இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இலக்காகி சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பாதாள உலகக்கும்பல்களின் மோதல் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.