தமிழ் பொது வேட்பாளரின் எழுச்சி



சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒரு குறியீடாக தமிழ் பொது வேட்பாளர் எழுச்சி பெற்றுள்ளார் என தமிழ் மக்கள் பொதுச் சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் தமிழ் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் தாயக ஒருமைப்பாட்டை பலப்படுத்த விரும்புபவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவை எனவும் தமிழ் மக்கள் பொதுச் சபை தெரிவித்துள்ளது.


புலம்பெயர்ந்தோர் மத்தியில் எழுச்சி 
அதேசமயம், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், தேர்தல் நடவடிக்கைகளில் உதவி புரிந்த அமைப்புக்களுக்கும் தனிநபர்களுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.





புதியது பழையவை