மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்



கல்குடா தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 7,504 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 45,325 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 24,782 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 165 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5967 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3205  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2479 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 901 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
புதியது பழையவை