உலகின் மிகச்சிறிய அமைச்சரவை இன்று கூடவுள்ளது!



அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (30-09-2024) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பங்குபற்றவுள்ள இந்த சந்திப்பு உலகின் மிகச்சிறிய அமைச்சரவை கூட்டமாக அமையவுள்ளது.

 புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டைப் பாதிக்கும் பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை தீர்மானங்கள் நாளை அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும் என உதவி செய்திப் பணிப்பாளர் எல்.பி.  திரு.திலகரக்னா தெரிவிக்கிறார்.
புதியது பழையவை