மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்த முச்சக்கரவண்டி



இன்று (14-09-2024)சனிக்கிழமை பிற்பகல் வேளையில் மட்டக்களப்பு வவுனதீவு பகுதியிலிருந்து விளாவெட்டுவான் பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென நடுவீதியில் தீப்பற்றி எரிந்து தீக்கிரையானது. 

முச்சக்கரவண்டியில் இயந்திரப்பகுதியில் ஏற்பட்ட தீயே முச்சக்கரவண்டி பூராகவும் பரவியுள்ளது. 

இவ் அனர்த்தத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனதீவு பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.
புதியது பழையவை