நாடெங்கிலும் இன்றைய தினம் (15-09-2024) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியதை காணமுடிந்தது.
இன்று(15-09-2024) காலை ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடம் ஆசிகள் பெற்று பாடசாலைகளுக்கு சென்றதை காணமுடிந்தது.
புலமைப்பரிசில் பரீட்சைகள்
குறிப்பாக பெற்றோர் இன்று காலை ஆர்வத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துவந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.
இறுக்கமான நடைமுறைகளுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.