தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்!




தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் (28-09-2024) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.

மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன், இரா.சாணக்கியன், கலையரசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




புதியது பழையவை