ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி



மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06-09-2024) வெளியிடப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தவிற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எஸ்.பி.ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய பொது சேவைகளாக குறிப்பிட்டுள்ளது.
புதியது பழையவை