மூன்றுமொழியும் பேசத்தெரிந்த மட்டக்களப்பு மல்லி (தம்பி) வளமைபோலவே கட்சியின் மத்தியகுழுக் கூடத்திலும் வளவளவென்று பேசி வாங்கிக்கட்டிய சம்பவம் இப்பொழுதுதான் பேச்சுவாக்கில் வெளியேவந்திருக்கின்றது.
மல்லிக்கு திடீரென்று திருகோணமலை மீது பாசம் பொங்கிவந்து, சிறீதரனை திருகோணமலையில் தேர்தலில் நிற்கும்படி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
'திருகோணமலையில் தமிழ் மக்களின் ஆசனம் பறிபோய்விடும், அதனால் வடக்கில் இருந்து ஒருவர் திருகோணமலையில் போட்டிபோட்டால் நல்லது. சிறீதரனே அதனைச் செய்தாகவேண்டும்' என்று கூறித் தொலைத்திருக்கின்றார்.
ஏற்கனவே கடுப்பில் இருந்த சிறீதரன் ‘நீர் கட்சியின் எல்லா வேலைகளையும் பார்த்து முடித்துவிட்டு இப்போ மற்றவர்களுக்கு ஆசனம் வழங்கும் வேலையையும் பார்க்க வந்திட்டீரோ..’ என்று கொதித்தெழுந்திருக்கின்றார்.
அத்தோடு, ‘எங்களுக்கு பார் லைசன்ஸை நீரோ எடுத்துத் தந்தனீர்? நாங்கள் 'பார்லைசன்ஸ்' எடுத்ததாக ஊரெல்லாம் பேசித்திரிகீறீரே.. நாங்கள் 'பார் லைசன்ஸ்' எடுத்ததை நீர் கண்டனீரோ.. உம்மால் நிரூபிக்கமுடியுமோ..’ என்று மல்லியைப் போட்டு குடைகுடையென்று குடைந்துவிட்டாராம்.
மல்லிக்கு வியர்த்துக்கொட்டிவிட்டதாம்.
‘வியர்க்கிறது ..முகத்தையும், தலையையும் துடையுங்கள்..’ என்று கூறி மல்லியிடம் துண்டை எடுத்துக்கொடுத்த யோகேஸ்வரன்.. கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டாராம்.
‘சுமந்திரன் லெவலுக்கு நானும் சதியெல்லாம் செய்கிறன் எண்டு வெளிக்கிட்டு சொதப்பிவிட்டு, மறுகா ஊருக்கு வந்து ‘மட்டக்களப்பானை மதிக்கிராங்க இல்லை என்று கருணா போல ஒப்பாரிவைக்கிறது.. மல்லிக்கு இதே வேலையாப் போச்சு.’ என்று அவர் கல்குடா தொகுதியில் பேசியிருக்கின்றார்.