காணிகளை விற்று வாழும் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா



காணிகளை விற்று வாழ்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்ட போது வங்கிக்கணக்கு மேலதிக பற்று நிலையில் காணப்பட்டது. இதுவரையில் காணிகளை விற்பனை செய்தே வாழ்க்கை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து தமக்கு எதுவும் கிடைக்கப்பெறுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒன்பது ஆண்டுகளாக தமது ஓய்வூதியத்தை இடைநிறுத்தியிருந்ததாகவும், தம்மிடம் இருப்பதை ஏனையவர்களுக்கு வழங்கியுள்ளமே தவிர யாருடைய பணத்திளும் நாம் உணவு உண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


வாகனங்களும் தேவை
தனது பணியாளர்களுக்கு தாமே சம்பளம் கொடுப்பதாகவும் , மின்சாரக் கட்டணம், நீர்க்கட்டணம் என்பனவற்றை தாமே செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் தமக்கு வீடு ஒன்றும், நான்கு வாகனங்களும், வழங்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு ஓர் ஜீப்பும், காரும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இரண்டு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களும் தேவை என்றால் அவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் எனவும், பஸ்ஸில் பயணம் செய்வதை தாம் வெட்கமாக கருதவில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை