மட்டக்களப்பில் மாமியாரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி மருமகன் அரங்கேற்றிய சம்பவம்!







மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தனிமையில் இருந்த 40 வயதுடைய மாமியாரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி மருமகன் 35 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு வீட்டிலிருந்த 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (06-10-2024) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றுள்ளது.


16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன்
மாமியாரின் வீட்டிற்கு 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கணவர் இல்லாத நிலையில், தனது (22) மகள் திருமணம் முடித்து வேறு இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில், வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் நேற்று (07-10-2024) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


மேலும் சம்பவம் தொடர்பில் மருமகன் மற்றும் 16 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







புதியது பழையவை