எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை (30-10-2024) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒக்டோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள உறுதிப்படுத்தல் அதிகாரிகளின் முன்னிலையில் வாக்களிக்க முடியும்.
இந்த 3 தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.