மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் தமிழ் இளைஞர்களுக்கு மதுபானம் கொடுத்து தமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அவலம் இடம்பெற்று வருகின்றது.
தமிழரசுகட்சியின் (ITAK) சர்ச்சைக்குரிய குறித்த வேட்பாளர் தினமும் இரவு நேரங்களில் தமிழ் கிராமங்களுக்கு சென்று 20 வயதுக்கும் 30 வந்துக்கும் இடைப்பட்ட இளைஞர்களை கடற்கரைக்கு அழைத்து சென்று மதுபான ரின்னும், கொத்துரொட்டியும் வழங்கி வீட்டு சின்னத்திற்கும் தமது இலக்கத்துக்கும் பிரசாரம் செய்யுமாறு மது போதைகள் மூலம் இளைஞர்களை தூண்டி வருகின்றார்.
இவ்வாறு கடந்தவாரம் சந்திவெளி, நாவற்குடா, கல்லடி, களுதாவளை, களுவாஞ்சிகுடி போன்ற பகுதிகளில் இதுவரை எட்டு இடத்தில் இவ்வாறு மதுபான விருந்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஏற்பாடு செய்து கொடுக்கும் முகவர்களுக்கு ஒரு சந்திப்பு ஒழுங்கு படுத்திக்கொடுத்தால் பத்தாயிரம் அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதாகவும் அந்த மதுபான விருந்தில் கலந்து கொண்டவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.