வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் இருந்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் இன்று(19-10-2024) பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதனையடுத்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் வெளியேற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விசேட சோதனை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.