சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது - காட்டு யானை தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!



பொலன்னறுவை – பகமுனை வீதியில் இன்று (07-10-2024) காலை 4.45 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது வீதியில் சென்ற காட்டு யானை மீது வேன் மோதியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை வேனை யோதா கால்வாயில் கவிழ்த்துள்ளது. இதன் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பகமுனை பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



புதியது பழையவை