மட்டக்களப்பு நகரில் சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம்



சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (01-10-2024)காலை நடைபெற்ற நிலையில் மட்டக்களப்பு நகரில் சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு இறுதி யுத்ததின்போது ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதி கோரி இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.





இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலைசெய்தவன் யார்?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே இறந்துகொண்டு இருக்கின்றோம், கையளிக்கப்பட்ட சகோதரங்கள் எங்கே? என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் 1ஃ2 மணி நேரம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.



புதியது பழையவை