உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. அதுதான் சர்வதேச சிறுவர் தினமாகிய அக்டோபர் 1 ம் திகதியாகும்.
"தொனிப்பொருள் பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்"
எனும் தொணிப் பொருளின் கீழ் சர்வதேச சிறுவர் தினம் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாய திட்டம் ஸ்ரீ வெள்ளிமலை பிள்ளையார் அ த க பாடசாலை
அதிபர் த.சேரலாதன் தலைமையில்
இன்று(01-10-2024) காலை இடம்பெற்றது.
இதன்போது மாணவிகள் சிறுவர் உரிமை தொடர்பான வாசகங்களை எழுப்பி, பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வின் போது மாணவர்களுக்கு விளையாட்டுக்களும் இடம் பெற்றனர்.
பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் துர்க்கா முன்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.