மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் அம்பிளாந்துறை இடையேயான படகுப் போக்குவரத்தானது தடைப்பட்டுள்ளது போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் படகானது மிகவும் கடுமையாக சேதமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
குறித்த படகுப் பாதை 20 வருடங்களுக்கு மேலாக பயன் பயன்டுத்தபட்டு வருவதுடன் அதன் கீழ் பகுதி முற்றாக இறந்து சிதைந்து உதிர்ந்து வருகிறது கையால் பெயர்த்து எடுக்கக்கூடிய நிலையிலே உள்ளது சிலபகுதி இதில் செல்லும் போது உயிரை பணயம் வைத்தே பயணம் செய்யவேண்டிய நிலையி பயணிகள் காணப்படுகின்றனர்.
ஒரு கரையில் இந்த பாதையில் ஏறும் போது பத்திரமா வீடு போய் சேர்வமா என்ற அச்சம் குடிகொண்டுள்ளது. இப் படகு சேதமடையும் போது மீண்டும் மீண்டும் ஒட்டி ஒட்டி இப்போது ஒட்டுவதற்கு இடமில்லாமல் உள்ளது. தற்போது படகு திருத்தத்திற்காக மேல் ஏற்றப்பட்டுள்ள நிலையில் திருத்தி மீள பயன் படுத்தும் நிலைக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலை காணப்படுவதுடன் ஒட்டியும் சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறு பயன் படுத்த முடியாத நிலை உருவாகும் என்பதே உண்மை.
எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கையினை மேற் கொள்வதுடன் பயணிகள் போக்குவரத்தினையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தி மீண்டும் ஒரு கிண்ணியா படகு விபத்து போன்று இடம் பெறுவதை தடுக்குமாறும் இதற்கான ஒரு நல்ல தீர்வினை பெற்று தருமாறும் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.