மட்டக்களப்பு மாவட்டம் 2024, தேர்தல் பற்றிய ஒரு பார்வை-பா.அரியநேத்திரன்



இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் 17-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்வரும் வியாழக்கிழமை 2024 நவம்பர் 14 காலை 7, மணி தொடக்கம், மாலை 4, மணிவரை தேர்தல் நடைபெறும்.                            

இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் 2024 செப்டம்பர் 24 இல் கலைக்கப்பட்டது, புதிய நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 2024 அக்டோபர் 4 முதல் 11 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11/11/2024, திங்கள் கிழமை நள்ளிரவு 12, மணிவரையும் பிரசாரங்கள் நிறைவுபெறும்,

தேர்தல் இடம்பெறுவதற்கு முன் 48 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்ட ஏற்பாடுகளின் படி “தேர்தல் அமைதிக்காலம்” என அது அழைக்கப்படும். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்காளர்களிடம் உள்வாங்கிய கொள்கைகளையும் திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்காளர்கள் தீர்மானம் மேற்கொள்ளவதற்காகவே இந்த 48, மணித்தியாலங்களை தேர்தல் அமைதிக்காலம் என அழைப்பதுண்டு.
தேர்தல் இடம்பெறுவதற்கு 24, மணித்தியாலங்களு முன்னர் 12/11/2024, நள்ளிரவுடன் வேட்பாளர்களின்  பணிமனைகளில் உள்ள வெனர்கள், படங்கள், அலங்காரங்கள் அகற்றப்பட்டு வெறுமையாக அந்த காரியாலயம் இருக்கவேண்டும்.
                                                                                  👉🏼புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 2024 நவம்பர் 21,ல் கூடி 225, பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமானம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

🙌🏿மட்டக்களப்பில் 22 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,
27, சுயேட்சை குழுக்கள் மொத்தமாக 49, அமைப்புகள் போட்டியிடுகின்றன..
மொத்த வேட்பாளர்கள் 392, பேர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 05, மட்டுமே,04, உறுப்பினர்கள் தெரிவுடன் 01, மேலதிகம் (bonus)ஆசனம். (04+01=05) மொத்த ஆசனங்களாகும்.

வோணஷ் ஆசனம் என்பது அதிகூடிய வாக்கை பெறும் கட்சிக்கு தன்னிச்சையாக அது சென்றுவிடும் உதாரணமாக A, எனும்கட்சி அறுபதாயிரம் 60000 வாக்குகளையும், B, எனும் கட்சி அறுபதாயிரத்து ஒரு 60001, வாக்குகளை பெற்றால் அதாவது ஒருவாக்கை கூட B, என்ற கட்சி மேலதிகமாக பெற்றால் அந்த வோணஷ் ஆசனம் B, எனும் கட்சிக்கே 2, ஆசனம் (1+1) வழங்கப்படும்.A,கட்சிக்கு வோணஷ் ஆசனம் இல்லை.

மட்டக்களப்பில் இம்முறை மூன்று அல்லது நான்கு கட்சிகளில் இருந்து மட்டுமே 05, ஆசனங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒருகட்சியில் இருந்து அல்லது ஐந்து கட்சிகளில் இருந்து 05, ஆசனங்கள் கிடைப்பதில்லை.

02,கட்சிகளில் இருந்தும் இம்முறை மட்டக்களப்பில் 05, ஆசனம் கிடைக்க வாய்புகள் இல்லை(இது 2004, ல் மட்டுமே வரலாற்றில் ஒரு தடவை சாத்தியமானது)
எனவே 3, அல்லது 4, கட்சிகளுக்கு மட்டுமே இம்முறை 5, ஆசனங்களை பெற வாய்புகள் உள்ளன…!

ஏனைய 45, கட்சிகளுக்கும் ஆசனம் கிடையாது அது தோல்வியடைந்த கட்சிகளாகவும் அதில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட (360) பேரும் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்படும். இதில் ஏறக்குறைய 35, கட்சிகளுக்கு 5% வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெற முடியாமல் போகலாம்.

👉🏼1,ம் கட்ட வாக்கெண்ணும் பணி தேர்தல் இடம்பெற்ற தினம் (14/11/2024) வியாழக்கிழமை இரவு 09, மணிக்கு ஆரம்பமாகி முதலில் தபால் மூல வாக்கெண்ணும் பணியை தொடர்ந்து ஏனைய வாக்குகளும் எண்ணப்பட்டு பெரும்பாலும நள்ளிரவுக்கு பின்னர் எந்தந்த கட்சிகள் கூடிய வாக்குகளை பெற்றன என்பதும், அதில் ஆசனங்களை பெற்ற கட்சிகளும் வரிசைப்படுத்தப்படும்.   

இது பெரும்பாலும் நள்ளிரவு 12, மணிக்கும் (15/11/2024) அதிகாலை 01, மணிக்கும் இடையில் தெரியவரும்.

இந்த 01. ம் கட்ட வாக்கெண்ணும்பணி நிறைவடைந்ததும் ஆசனம் பெற்ற(வெற்றியீட்டிய) கட்சிகளும் எந்தக்கட்சி எத்தனை ஆசனம் பெற்றுள்ளது என்ற விபரமும் தெரியவரும், இந்த முடிவு அறிந்ததும் வாக்கெண்ணும் நிலையத்தில்( மட்டக்களப்பு இந்துக்கல்லூரி)  இருந்து 18, அல்லது 19, அரசியல் கட்சி வேட்பாளர்களும் 27, சுயேட்சை குழு மொத்தமாக  45, அமைப்புக்களை சேர்ந்த  360, வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக வாக்கெண்ணும் நிலையத்துக்கு சென்றவர்களும் வெளியேறிவிடுவார்கள்..

👉🏼2, ம் கட்டம் விருப்பு வாக்கெண்ணும்பணி இது ஆசனங்கள் பெற்ற  மூன்று அல்லது நான்கு கட்சிகளை சேர்ந்த 32 வேட்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்து காத்திருக்க வேண்டியது,
வேட்பாளர்களை பதட்டம் அடைய வைக்கும் ஒரு தருணம் இது…

விருப்பு வாக்குகளின் கணிப்பீடு நீண்ட நேரம் செல்லும் பெரும்பாலும் மறு நாள் 15/11/2024, வெள்ளிக்கிழமை முற்பகலில் சிலவேளை கணிப்பீடு செய்வதில் சிக்கல் நிலை எழுந்தால் அன்று மாலைவரையும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவுக்கப்படுவது காலதாமதமாகலாம்.

இதில் கவனிக்க வேண்டியது மாவட்டங்களில் உள்ள நிலையங்களில் வாக்கெண்ணும் பணி நிறைவு செய்தாலும் அந்த முடிவுகளை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர்(மாவட்ட அரச அதிபர்) அந்த முடிவுகளையும் உத்தியோக பூர்வமாக அறிவிக்க அதிகாரம் இல்லை அவர் கொழும்பு தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு தொலை நகல் (Fax)அல்லது மின் அஞ்சல்(E mail) மூலம் உடனுக்குடன் அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆணைக்கு தலைவர்  அதனை பரிசீலித்த பின்னர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக மாவட்ட முடிவுகள் கொழும்பில் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள நேரடி ஊடக வாயிலாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
எனினும் மாவட்டத்தில் உள்ள வெற்றிபெற்ற கட்சி வேட்பாளர்கள் அதனை அறிந்து விடலாம்.

தபால்மூல முடிவுகள், தொகுதிரீதியான முடிவுகள், இரண்டும் அறிவித்த பின்னரே மாவட்ட ரீதியிலான முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் விருப்பு வாக்கில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

இதுதான் தேர்தல் முடிவு அறிவிப்பு நடைமுறை.!

விகிதாசாரத்தேர்தலில் ஆசனங்களை பெறும் கட்சிகளில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்கள்(வெற்றிபெற்றவர்கள்) என கருதினாலும் அந்த கட்சியில் தெரிவாகாமல் எஞ்சியிருக்கும் எட்டு வேட்பாளர்களில் தெரிவாகாத உறுப்பினர்களின் பங்களிப்பும்  ஆதரவும் அந்த கட்சிக்கு இருந்தது என்ற அடிப்படையில் அவர்களை தோல்வியடைந்தவர்கள் என கருதமுடியாது.

எஞ்சிய உறுப்பினர்களை தெரிவு செய்யப்படாதவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.
அதாவது கட்சி வெற்றிக்காக உழைத்தவர்கள் என்பதை புரிதல் வேண்டும்.

ஆனால் கடந்த காலங்களில் பலருக்கு இந்த விளக்கம் அறியாமல் அவர்களை தோல்வி அடைந்தவர்கள் என அழைத்தவர்களும் உண்டு இனியாவது இதனை கவனத்தில் எடுப்பது நல்லது.

தோல்வியடைத்தவர்கள் யார்..,❓

விகிதாசார தேர்தலில் ஆசனம் எதுவுமே பெறாத கட்சிகளும், அதில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அனைவரும் தோல்வியடைந்தவர்கள் என அழைக்கப்படுவர். எந்த கட்சியிலும் ஒரு ஆசனத்தை பெறாதா கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும், அதில் வேட்பாளராக பெயர் குறிப்பிட்டவர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தோல்வி கண்டவர்கள் என்பதே உண்மை.

🫵🏼மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14/11/2024, தேர்தல் முடிவுகள் எனது ஆய்வின்படி..
27, சுயேட்சை குழுக்கள் எதுவுமே ஆசனங்களை பெற வாய்பில்லை.. அதுபோல் 
22, அரசியல் கட்சிகளில் 18, அல்லது 19, கட்சிகளுக்கும் ஆசனங்கள் பெறவாய்பில்லை.

03, கட்சிகள் மட்டும் 05, ஆசனங்களுக்கு உரித்துடையதாக (வாக்கு அதிகம்) பெற சந்தர்ப்பம் உண்டு.  மூன்று கட்சிகள் எனில் முதன்மையாக வாக்குகளை பெறும் கட்சிக்கு இரண்டு ஆசனத்துடன் மேலதிக (வோணஷ்) ஆசனம் ஒன்றும் சேர்த்து 03, ஆசனங்களை அந்த கட்சி பெறும். மிகுதி இரண்டு கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனங்கள் பெறும் சந்தர்ப்பம் உண்டு.
சிலவேளை நான்கு கட்சிகளாவும் மாறலாம் அப்படி எனில் முதல் நிலை பெறும் கட்சி 02, ஆசனங்களும் ஏனைய 03, கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனமும் கிடைக்கலாம்.

கடந்த 1989, தொடக்கம் இறுதியாக இடம் பெற்ற 2020, மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை மீட்டுப்பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளில் வரலாறுகளை எப்படி அமைந்தன என்பதை பார்போம்.                                                            தமிழர் விடுதலை கூட்டணியும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியும்(தமிழ் தேசிய கூட்டமைப்பு) மட்டுமே ஏனைய கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லா பொதுத்தேர்தல்களிலும் முன்னிலை பெற்றதை புள்ளிவிபரம் தெளிவாக காட்டுகிறது.

1. 1989, ம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி 55,141, வாக்குகளை பெற்று 03, ஆசனங்களும்,
2. 1994,ம் ஆண்டு 76,516, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும்,
3. 2000, ம் ஆண்டு 54,448, வாக்குகளைப்பெற்று 02,ஆசனங்களும்,
4. 2001, ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவான பின்னர் 86,284,ஆசனங்களைப்பெற்று 03, ஆசனங்களும்,
5. 2004,ம் ஆண்டு 1,61,011, வாக்குகளை பெற்று 04, ஆசனங்களும்,
6. 2010, ம் ஆண்டு 66,235,வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும்
7. 2015, ம் ஆண்டு 1,27,185, வாக்குகளைப்பெற்று 03, ஆசனங்களும்,
8. 2020, ம் ஆண்டு 79460, வாக்குகளை பெற்று 02, ஆசனங்களும் மட்டக்களப்பில் கடந்த எட்டு விகிதாசாரத்தேர்களிலும் கிடைத்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்
கடந்த எட்டு விகிதாசார பொதுத்தேர்தல்களிலும் தமிழர் விடுதலை கூட்டணிதமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி)  முன்னிலை பெற்றுள்ளது. எந்த ஒரு தேர்தல்களிலும் 2,ம் நிலைக்கு செல்லவில்லை வேறு எந்த ஒரு கட்சிகளும் முதன்நிலையில் ஆசனங்களை பெறவில்லை,

இம்முறை 2024, தேர்தலிலிலும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிதான் முதல் நிலை பெறும் அதில் எந்த மாற்றுக்கருத்துகளும் இல்லை .

இரண்டாம், முன்றாம், சிலவேளை நான்காம் நிலையில் எந்தெந்த கட்சிகள்வரும் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதை  தவிர்த்துள்ளேன்.

வடகிழக்கில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகளும் ஆசன எண்ணிக்கையும்..
த.வி.கூ
1.1989, ல் 188,594வாக்கு:10,பா.உ.
2.1994,ல் 132,461வாக்கு:05,பா.உ
3.2000,ல் 106,033வாக்கு:05,பா.உ
த. தே.கூ.
1. 2001, ல் 348164, வாக்கு:15, பா.உ,
2. 2004,ல் 633654, வாக்கு:22,பா.உ,
3. 2010,ல் 233,190, வாக்கு:14,பா.உ,
4. 2015,ல் 515,963, வாக்கு:16,பா.உ,
5. 2020,ல் 327,168,வாக்கு:10,பா.உ.

இருப்பது இன்னும் ஐந்து தினங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..!

✍️பா.அரியநேத்திரன்.
09/11/2024
(அரியம் ஆய்வகம்)
புதியது பழையவை